Day: June 2, 2013
-
அவசரமாக தரையிறங்கிய ஹெலிகொப்டர்: அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய ஈரான் ஜனாதிபதி
தெஹ்ரான்: ஈரான் ஜனாதிபதி முகமது அஹமதி நிஜாத் இரண்டாவது முறையாக ஜனாதிபதியாக இருந்து வருகின்ற நிலையில் அங்கு இந்த மாதம் நாடாளுமன்ற தேர்தல் நடக்க இருக்கிறது. ஜனாதிபதி அஹமதி நிஜாத்தும், அவரது அதிகாரிகள் குழுவும் மசாந்தரானில் புதிதாக அமைக்கப்பட்ட சாலைகள் மற்றும் குகைப் பாதையை திறந்து வைக்க ஹெலிகொப்டரில் சென்றனர்.
-
மட்டக்களப்பு சிவானந்தா தேசிய பாடசாலைக்கும் திருகோணமலை கோணேஸ்வரா இந்துக்கல்லூரிக்கும் இடையிலான கிரிக்கட் போட்டியில் திருகோணமலை கேணேஸ்வரா இந்துக்கல்லூரி சம்பியன்
பழுலுல்லாஹ் பர்ஹான் மட்டக்களப்பு: கிழக்கின் பொன் சமர் என வர்ணிக்கப்படும் மட்டக்களப்பு சிவானந்தா தேசிய பாடசாலைக்கும் திருகோணமலை கோணேஸ்வரா இந்துக்கல்லூரிக்கும் இடையிலான கிரிக்கட் போட்டியில் திருகோணமலை கேணேஸ்வரா இந்துக்கல்லூரி சம்பியனாக தெரிவுசெய்யப்பட்டது. நான்காவது தடவையாக இடம்பெற்ற
-
கிட்டங்கிப் பாதைக்கு விடிவு – காலம் கடந்தும் மயோனின் திட்டம் நிறைவேறுகிறது
கல்முனை: கல்முனை நகரையும் நாவிதன்வெளி பெரு நிலப்பரப்பையும் இணைக்கும் கிட்டங்கி பாலம் நீண்ட காலத்திற்குப் பின்னர் புனரமைக்கப்பட்டு வருகின்றது.இதன் நிர்மாண வேலைகள் தற்போது துரிதமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இது விரைவில் மக்கள் பாவனைக்கு திறந்து விடப்படும் என அறிவிக்கப்படுகிறது.
-
30 வருட கால யுத்த சூழலில் இவ்வாறான கொள்ளைச் சம்பவங்கள் இடம்பெறவில்லை. ஆலயத்தில் இடம்பெற்ற கொள்ளைச் சம்பவம் தொடர்பில் த. தே. கூ. பா. உ. சீ. யோகேஸ்வரன் விளக்கம்
பழுலுல்லாஹ் பர்ஹான் மட்டக்களப்பு: குருக்கள்மடம் ஸ்ரீல ஸ்ரீ செல்லக் கதிர்காமர் ஆலயத்தில் இடம்பெற்ற கொள்ளைச் சம்பவம், விக்கிரகம் மற்றும் ஆலய சொத்துக்கள் சேதமாக்கப்பட்டமை மற்றும் மாங்காடு பிள்ளையார் ஆலயத்தின் விக்கிரக திருட்டு மற்றும் கிரான்குளம் ஐயனார் ஆலய உண்டியல் திருட்டு சம்பவங்கள் தொடர்பாக மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவை தலைவர் சீ. யோகேஸ்வரன் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.
-
சமுர்த்தி அதிகாரிகளின் சேவைகள் பணத்துக்காக அல்லாமல் மனித நேயத்துக்காக இருக்க வேண்டும் – ஹூனைஸ் பாருக்
இர்ஷாத் றஹ்மத்துல்லா மன்னார்: சமுர்த்தி அபிவிருத்தி அதிகாரிகளின் சேவைகள் பணத்துக்காக அல்லாமல் மனித நேயத்துக்காக இருக்க வேண்டும் என்று வன்னி மாவட்ட ஆளும் கட்சி பாராளுமன்ற
-
முல்லைத்தீவு மாவட்டத்தில் 160 பேருக்கு சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகஸ்தர் நியமனம்
இர்ஷாத் றஹ்மத்துல்லா முல்லைத்தீவு: வடக்கில் வாழும் சகல சமூகத்தினதும் மேம்பாடுகளுக்கு தேவையானவற்றை பெற்றுக் கொடுப்பதில் அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் முக்கிய இரு கட்சிகளான
-
குருக்கள்மடம் கோயிலில் உள்ள 19 விக்கிரகங்கள் சேதம்- 25 பவுன் தங்கம் கொள்ளை – பொலிசார் விசாரணை
பழுலுல்லாஹ் பர்ஹான் களுவாஞ்சிக்குடி: மட்டக்களப்பு மாவட்டத்தில் களுவாஞ்சிக்குடி பிரதேச செயலாளர் பரிவுக்குட்பட்ட குருக்கள் மடம் எனும் இடத்தில் மட்டக்களப்பபு –கல்முனை குருக்கள்மடம் பிரதான வீதியில் அமைந்துள்ள ஸ்ரீரில ஸ்ரீ செல்ல கதிர்காமர் கோயிலில் உள்ள 19 விக்கிரகங்கள் இனம் தெரியாத நபர்களால் நேற்று இரவு சேதமாக்கப்பட்டுள்ளதாக களுவாஞ்சிக்குடி பொலிசார் தெரிவித்தனர்.
-
ஒரு சிங்களப்பெண் 10 குழந்தைகளை பெறவேண்டும் தேரர்களின் உபதேசம்
மாத்தறை: ஒருகோடியே 30 இலட்சம் சனத்தொகை கொண்ட சிங்கள சனத்தொகையில் 10 இலட்சம் சிங்கள பெண்களே குழந்தைப் பெற்றுக்கொள்ளும் வயது மட்டத்தில் உள்ளனர். எனினும் அவர்களில் 8 இலட்சம் பெண்களால் மட்டுமே குழந்தை பெறக்கூடியதாக உள்ளது என ஸ்ரீ ஜெயவர்த்தன புர பல்கலைக்கழகத்தின் விரிவுரையாளரும் பெப்பிலியான சுனேத்ரா தேவி பிரிவெனாவின் தலைவருமான மெதகொட அபயதிஸ்ஸ தேரர் தெரிவித்துள்ளார்.
-
6 மாவட்டங்களுக்கு இயற்கை அனர்த்த எச்சரிக்கை!
கொழும்பு: தொடரும் சீரற்ற காலநிலை காரணமாக ஆறு மாவட்டங்களுக்கு இயற்கை அனர்த்த முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அடையாளம் காணப்பட்ட இப்பிரதேசங்களில் மண்சரிவு, பாறைகள் புரள்தல், குன்றுகள் சரிதல் போன்ற அனர்த்தங்கள் ஏற்படலாம் என தேசிய கட்டட ஆராய்ச்சி நிலையம் தெரிவித்துள்ளது.
-
வர்த்தக நிறுவனங்களாக மாறும் தனியார் வைத்தியசாலைகள்
கொழும்பு: தனியார் ஆஸ்பத்திரிகள் இன்று நோயாளிகளிடமிருந்து நியாயமற்ற முறையில் பணத்தைப் பறிக்கும் வர்த்தக நிறுவனங்களாக மாறிவருகின்றன. நாரஹேன்பிட்டியவிலுள்ள தேசிய இரத்த நிலையம் தனியார் ஆஸ்பத்திரிகளுக்கு ஒரு அலகு அல்லது ஒரு பக்கெட் இரத்தத்தை 1,100 ரூபாவுக்கு மாத்திரமே விற்பனை செய்கின்றது.
-
ஒசாமா கொல்லப்படுவதற்கு இலங்கைத் தமிழரின் வியூகம்!
வாஸிங்டன்: அமெரிக்காவிற்கு ஒசாமா பின் லேடனை கொலை செய்யும் திட்டத்தில், பிரதானமான ஒருவராக செயற்பட்டவர் இலங்கைத் தமிழரான பேராசிரியர் சிவலிங்கம் சிவநாதன் என தெரியவந்துள்ளது. இவர் யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரியில் 1968-75 காலப்பகுதியில் கல்வி கற்றவர்
-
‘விடுதலைப்புலிகளின் நிதிக்கட்டமைப்பு தொடர்கிறது’ – அமெரிக்கா
லண்டன்: விடுதலைப்புலிகள் அமைப்பின் நிதி திரட்டும் கட்டமைப்பு 2012 ஆம் ஆண்டில் தொடர்ந்தும் செயற்பட்டு வந்திருக்கிறது என்று அமெரிக்க அரசுத்துறையின் 2012 ஆம் ஆண்டுக்கான உலக நாடுகளில் பயங்கரவாதம் குறித்த அறிக்கை கூறியுள்ளது.