ஐக்கிய ராச்சியத்தில் திங்கட்கிழமை நோன்புப் பெருநாளாக அறிவிப்பு

eid londonலண்டன்: ஐக்கிய இராச்சியத்தில் (UK) 28-07-2014 திங்கட்கிழமை ஈதுல் ஃபித்ர் நோன்புப் பெருநாள் என அங்குள்ள பள்ளிவாயல்கள் தற்பொழுது அறிவித்துவருகின்றன. கிழக்கு லண்டன் பள்ளிவாயல் மற்றும் ரெடிங் நகர் பள்ளிவாயல்கள் தற்பொழுது பெருநாள் அறிவிப்பைச் செய்திருக்கின்றன. Read the rest of this entry »

சவுதி அரேபியாவில் ஷவ்வால் பிறை தென்பட்டதால் நாளை நோன்புப் பெருநாளாக அறிவிப்பு

normal_DSCF1881%20Waning%20crescent%20moon,%2018%20March%202007[1]- MJ

றியாத்: சவுதி அரேபியாவில் பல பாகங்களிலும் இன்று 27-07-2014 மாலை ஷவ்வால் மாதத்துக்கான தலைப்பிறை தென்பட்டதால், 28-07-2014 நாளை திங்கட்கிழமை ஈதுல் ஃபித்ர் நோன்புப் பெருநாள் கொண்டாடப்படுவதாக அரேப் தொலைக்காட்சி சற்று முன்னர் உறுதிப்படுத்தியது.

இதுவரையில் ஷவ்வால் பிறை தென்பட்டதாகத் தெரியவில்லை

crescent moon[1]கொழும்பு: இலங்கையின் எப்பாகத்திலும் இதுவரைக்கும் ஷவ்வால் மாதத்ததுக்கான தலைப்பிறை தென்பட்டதாகத் தெரியவில்லை. எனினும் கொழும்பு பெரியபள்ளிவாயலில் பிறைக்குறிய மாநாடு தொடர்ந்தும் இடம்பெற்றுவருவதாகவும், பிறை தென்பட்டதாக அறிவிக்கப்பட்டால் உடனடியாக இலங்கை மக்களுக்கு உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படும் எனவும் கொழும்பு பெரிய பள்ளிவாயல் பிறை மாநாட்டில் கலந்துகொண்டோர் தெரிவிக்கின்றனர்.

இன்றைய ஹமாஸ் தாக்குதலில் இந்தியாவில் பிறந்த இஸ்ரேல் இராணுவ வீரர் பலி!

gaza- AF-90

ஜெருஸலம்: ஹமாஸ் அமைப்பினர் நடத்திய அதிரடி ரொக்கெட் தாக்குதலில் இன்று இஸ்ரேல் ராணுவ வீரர் ஒருவர் உயிரிழந்தார். அவர் இந்தியாவில் பிறந்த இஸ்ரேலியர் ஆவார். இவரையும் சேர்த்து இதுவரை ஹமாஸ் தாக்குதலில் 43 இஸ்ரேல் ராணுவத்தினர் கொல்லப்பட்டுள்ளனர். Read the rest of this entry »

கோத்தபாயவிற்கு எதிராக சாட்சியம் அளிக்கவுள்ள முன்னாள் இராணுவ அதிகாரி

Gotabhaya_Rajapaksa_20090426[1]கொழும்பு: இலங்கையின் போர்க்குற்றங்கள் தொடர்பில் ஐ.நா மனித உரிமை ஆணைக்குழுவினால் நியமிக்கப்பட்டுள்ள விசாரணைக் குழுவின் முன் முன்னாள் இராணுவ அதிகாரி ஒருவர் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவுக்கு எதிராக சாட்சியமளிக்க உள்ளார்.
Read the rest of this entry »

யுத்த நிறுத்தத்திற்கு ஹமாஸ் மறுப்பு: காசாவில் மீண்டும் கடுமையான தாக்குதல்கள் ஆரம்பித்துள்ள இஸ்ரேல்!

gazaஜெரூஸலம்: காஸாவில் இஸ்ரேல் தனது இராணுவ தாக்குதல்களை மீண்டும் ஆரம்பித்துள்ளது. காசாவின் பல பகுதிகளிலும் பாரிய பீரங்கி குண்டுச் சத்தங்களை கேட்கக்கூடியதாக உள்ளது.இஸ்ரேலிய ஷெல் தாக்குதல் மீண்டும் ஆரம்பித்த நிலையில் மூன்று பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளார்கள் என்று காஸா அதிகாரிகள் கூறுகின்றனர்.
Read the rest of this entry »

தாருல் அதர் அத்த அவிய்யா அமைப்பின் ஏற்பாட்டில் நபி வழியில் நோன்பு பெருநாள் தொழுகை- காத்தான்குடி ஏத்துக்கால் கடற்கரையில்

Dharul Athar-பழுலுல்லாஹ் பர்ஹான்

காத்தான்குடி: தாருல் அதர் அத்த அவிய்யா அமைப்பின ஏற்பாட்டில் நபி வழியில் புனித ஈதுல் பித்ர் நோன்பு பெருநாள் தொழுகையும்,பெருநாள் குத்பா பிரசங்கமும் வழமை போன்று இன்ஷா அல்லாஹ் காத்தான்குடி ஏத்துக்கால் கடற்கரையில் காலை 6.30 மணிக்கு நடாத்தப்படவுள்ளதாக காத்தான்குடி-தாருல் அதர் அத்த அவிய்யா அமைப்பின் தலைவர் வை.பீ.ஏ. ரவூப் தெரிவித்தார். Read the rest of this entry »

பாலமுனை இஸ்லாமிய கலாசார வழிகாட்டல் மையத்தின் ஏற்பாட்டில் நபி வழியில் நோன்பு பெருநாள் தொழுகை- பாலமுனை நடுத்துறை கடற்கரையில்

amanullah palamunai- பழுலுல்லாஹ் பர்ஹான்

பாலமுனை: காத்தான்குடி-பாலமுனை இஸ்லாமிய கலாசார வழிகாட்டல் மையத்தின் ஏற்பாட்டில் நபி வழியில் புனித ஈதுல் பித்ர் நோன்பு பெருநாள் தொழுகையும்,பெருநாள் குத்பா பிரசங்கமும் வழமை போன்று இன்ஷா அல்லாஹ் பாலமுனை நடுத்துறை கடற்கரையில் காலை 6.20 மணிக்கு நடாத்தப்படவுள்ளதாக பாலமுனை இஸ்லாமிய கலாசார வழிகாட்டல் மையத்தின் தலைவர் ஏ.எச்.எம்.அமானுல்லாஹ் தெரிவித்தார். Read the rest of this entry »

றமழான் கால பயிற்சி வகுப்புக்களில் இருந்து நடாத்தப்பட்ட பரீட்சையில் சித்தியடைந்த மாணவ மாணவிகளுக்கு பணப் பரிசும், சான்றிதழும் வழங்கும் நிகழ்வு

palamunai- பழுலுல்லாஹ் பர்ஹான்

பாலமுனை: காத்தான்குடி-பாலமுனை இஸ்லாமிய கலாசார வழிகாட்டல் மையத்தின் ஏற்பாட்டில் புனித றமழான் மாதத்தில் இடம்பெற்ற றமழான் கால பயிற்சி வகுப்புக்களில் இருந்து நடாத்தப்பட்ட பரீட்சையில் சித்தியடைந்த மாணவ மாணவிகளுக்கு பணப் பரிசும், சான்றிதழும் வழங்கும் நிகழ்வும் கடந்த 25-07-2014 வெள்ளிக்கிழமை மாலை பாலமுனை அம்மார் ஜூம்மா பள்ளிவாயலில் இடம்பெற்றது. Read the rest of this entry »

தாருல் ஹதீஸ் அமைப்பின் அனுசரணையுடன் காத்தான்குடி கால்பந்தாட்ட லீக்கும், சவுண்டர்ஸ் விளையாட்டு கழகமும் இணைந்து ஏற்பாடு செய்த புனித இப்தார் நிகழ்வு

ifthar fazal- பழுலுல்லாஹ் பர்ஹான்

காத்தான்குடி: காத்தான்குடி- தாருல் ஹதீஸ் அமைப்பின் அனுசரணையுடன் காத்தான்குடி கால்பந்தாட்ட லீக்கும் ,சவுண்டர்ஸ் விளையாட்டு கழகமும் இணைந்து ஏற்பாடு செய்த புனித இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்வு கடந்த 25-07-2014 வெள்ளிக்கிழமை மட்டக்களப்பு மஞ்சந்தொடுவாய் முஹைதீன் ஜூம்ஆ பள்ளிவாயலில் இடம்பெற்றது. Read the rest of this entry »

29ம் இரவு புனித ஆலயத்தில் பெய்த மழை!

haram makkahமக்கா: புனித ரமழானின் 29ம் இரவான நேற்றைய இரவு அல்லாஹ்வின் புனித ஆலயமான ஹரம் ஷரீபில் மழைபெய்ய ஆரம்பித்தது. ஆனால் இதனை அதிசயம் என்ற பார்வையில் நோக்கவேண்டிய தேவை இல்லை. நபி(ஸல்) அவர்களது காலம் முதல் இன்றுவரை ஹரத்தில் தொழுகைகள் நடைபெற்று வருகின்றன. Read the rest of this entry »

மாஞ்சோலை 207ஏ கிராம சேவகர் யு.எல்.எம்.நஜீப் அவர்களை ஊடகவியலாளர் எம்.ரீ.எம்.பாரிஸ் அழிவு சத்தியத்துக்கான பகிரங்க அழைப்பு

faris photoஓட்டமாவடி: கோறளைப்பற்று மேற்கு பிரதேச செயலாளர் பிரிவின் மாஞ்சோலை 207ஏ கிராம சேவகர் யு.எல்.எம்.நஜீப் அவர்களை மட்டு மாவட்ட முஸ்லிம் ஊடகவியலாளர் சம்மேளனத்தின் செயலாளர் எம்.ரீ.எம்.பாரிஸ் பெரு நாள் தினத்தன்று ஓட்டமாவடி முகைதீன் ஜூம்ஆப்பள்ளிவாயலுக்கு பகிரங்க அழிவுச் சத்தியம் செய்வதற்காக அழைப்பு விடுத்துள்ளார். Read the rest of this entry »

பெருநாள் தொழுகை

1) நபி (ஸல்) அவர்கள் உண்ணாமல் நோன்புப் பெருநாள் தொழுகைக்கு புறப்பட மாட்டார்கள். ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகையைத் தொழுவதற்கு முன் உண்ண மாட்டார்கள் என புரைதா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள். (ஆதாரம்: திர்மிதி)

2) ஈத்தம் பழங்களை ஒற்றைப்படையாக சாப்பிடாமல் நபி (ஸல்) அவர்கள் நோன்புப் பெருநாள் தொழுகைக்கு புறப்பட மாட்டார்கள் என அனஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள். (ஆதாரம்: புகாரி) Read the rest of this entry »

24 மணிநேர யுத்தநிறுத்தத்திற்கு இஸ்ரேல் சம்மதம்!

gaza- MJ

டெல் அவிவ்: ஐ.நாவின் வேண்டுகோளிற்கிணங்க 24 மணிநேர யுத்த நிறுத்த கோரிக்கைக்கு இஸ்ரேல் சம்மதித்திருக்கின்றது. ஏற்கனவே 12 மணித்தியாலங்களாக இருந்த உடன்படிக்கை 16 மணித்தியாலங்களாக அதிகரிக்கப்பட்டது. ஆனால் 4 மணிநேர அதிகரிப்பை ஹஸாஸ் மறுத்திருந்தது.
Read the rest of this entry »

அமெரிக்காவின் முதலாவது தற்கொலை குண்டுதாரி சிரியாவில்…

al qaida- MJ

பெய்ரூட்: சிரியாவில் இடம்பெற்றுவரும் உந்நாட்டுப் போரில், சிரியா அரசாங்கத்துக்கு எதிராகப் போராடிவரும் அல்கைதா குழுவில் இணைந்து போராடிவந்த அமெரிக்க குடியுரிமையைப்பெற்ற தற்கொலைக் குண்டுதாரியின் காணொலியை சிரியாவின ‘நுஸ்ரா முன்னணி’ எனும் மீடியா வெளியிட்டிருக்கின்றது.
Read the rest of this entry »

காஸா யுத்த நிறுத்தம்: மேலும் 4 மணித்தியாலங்கள் நீடிப்பு

gaza (2)காஸா: காஸாவில் அறிவிக்கப்பட்டிருந்த 12 மணி நேர மோதல் இடைநிறுத்தத்தை இஸ்ரேலிய அரசாங்கம் மேலும் நான்கு மணி நேரத்துக்கு நீட்டித்துள்ளது. உள்ளூர் நேரப்படி காலை எட்டு மணிக்கு ஆரம்பித்திருந்த இந்த மோதல் இடைநிறுத்தம் இரவு பத்து மணி வரை கடைப்பிடிக்கப்படும் என்று தெரிகிறது.
Read the rest of this entry »

Follow

Get every new post delivered to your Inbox.

Join 1,239 other followers